search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    • இக்கலூர்,கும்டாபுரம், ஆகிய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது .
    • சாலையில் உள்ள பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்தது.

    தாளவாடி,

    தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வ ப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் மேகமூட்டம் சேர்ந்து தாளவாடி, தொட்ட காஜனூர் ,ஓசூர், சிக்கள்ளி, இக்கலூர்,கும்டாபுரம், ஆகிய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது .

    பலத்த காற்றால் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள பழமை யான மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    ஒரு மணி நேரத்துக்கு மேலாக மரத்தை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் யாரும் வராததால் அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் மற்றும் பேருந்துகள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. சில மாணவ -மாணவிகள் பேருந்தில் இருந்து இறங்கி நடந்தே சென்றனர்.

    ஒரு மணி நேரத்துக்கு பிறகு வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் பின்னர். போக்குவரத்து சீரானது.

    தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் 20 க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் காய்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும்நிலை உள்ளது. எனவே காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சூறைக்காற்றுடன் பெய்த மழையால் தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கிடு (36) என்பவரின் 500 நேந்திரம் வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது.

    Next Story
    ×