என் மலர்
உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் மோசடி : பொதுமக்கள் குற்றச்சாட்டு
- சமய அறநிலைய துறையினர் சரிவர கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
- அது குறித்து கேட்டால். கேள்வி கேட்கும் நபர்களை சிலர் கூட்டாக சேர்ந்து அடித்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே எலவடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் கடந்த 10 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் வேண்டுதலின் பெயரில் சாமிக்கு தங்க நகைகள் நன்கொடையாக பல ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.இந்தக் கோவிலை இந்து சமய அறநிலைய துறையினர் சரிவர கண்டு கொள்ளாமல் இருப்பதால் இந்த கோவி லுக்கு அறங்காவலர்கள் போன்று செயல்படும் சிலர் அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்த தங்கத்திலான தாலி, தாலிக்கொடி, ஒட்டியானம் போன்ற நகைகளை வெளியில் எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரூ.9 லட்சத்திற்கு கோவில் நகைகள் விற்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
இப்படி இந்த கோவில் நிர்வாகத்தில் சிலர் தலையிட்டு முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதைக் கண்ட சிலர் அது குறித்து கேட்டால். கேள்வி கேட்கும் நபர்களை சிலர் கூட்டாக சேர்ந்து அடித்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர்கள் கோவில் உண்டியலில் சேரும் ரொக்க பணம் மற்றும் கோவில் நிலம் ஆகியவற்றையும் முறைகேடாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றால் அவர்கள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சிலர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து சின்னசேலம் வட்ட இந்து சமய அறநிலைய த்துறையினரிடம் கேட்டபோது சின்னசேலம் வட்டத்தில் 145 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது அவைகளை கண்காணித்து நிர்வகிக்க சிரமமாக உள்ளது என கூறி வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிட்டு எலவடி கிராமத்தில் புற்று மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுபிடித்து கோவில் உடைமைகளை மீண்டும் கோவிலுக்கே வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.