என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
- 2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது.
- போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கின்றன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடக்கின்றன. ஆண்-பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையானப் போட்டிகளும் என 50 வகையான போட்டிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
15 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப் பிரிவினர் கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து மற்றும் கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், 12 வயது முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவியர்கள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைக்கோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேசைப் பநந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான டென்னிஸ், பளுத்தூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.
மேலும், 17 வயது முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவ-மாணவியர்கள் மாவட்ட அளவிலான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைக்கோல்பந்து, கையுந்துப்பந்து, மேசைப்பந்து போட்டிகளி லும், மண்டல அளவிலான டென்னிஸ், பளுத்தூக்குதல், கடற்கரை கையுந்துப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அளவிலான இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து, கபடி, எறிப்பந்து போட்டிகளிலும், மண்டல அளவிலான இறகுப்பந்து, தடகளம், கையுந்துப்பந்து, கபடி, எறிப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும், அரசு ஊழியர்கள் மாவட்ட அளவிலான கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, செஸ் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பயணப்படி, சிறப்பு சீருடை, தங்கும் வசதி ஆகியவை வழங்கப்படும்.
மாவட்ட அளவிலானப் போட்டிகளில் தனிநபர்
பிரிவில் வெற்றிப்பெறு பவர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 - எனவும், இரட்டையர் பிரிவிற்கு ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம் எனவும், குழுப்போட்டிகளுக்கு குழு எண்ணிக்கையிற்கேற்ப ஒவ்வொருவருக்கும் தலாரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 எனவும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பப்படும் விளையாட்டு வீரர் வீராங்க னைகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் தனிநபர் மற்றும் குழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்