search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹைவேவிஸ் மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
    X

    மலைச்சாலையில் முறிந்து விழுந்த மரம்.

    ஹைவேவிஸ் மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    • பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியால் மரங்கள் நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன.
    • சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது.

    இங்கு மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கு சின்னமனூரிலிருந்து மகாராஜா மெட்டு வரை 52 கி.மீ நெடுஞ்சாலை செல்கிறது.

    இந்நிலையில் பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியால் மரங்கள் நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்தியுள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×