search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாச்சிகுளத்தில். ரெயில் பயணிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
    X

    நாச்சிகுளத்தில் ரெயில் பயணிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

    நாச்சிகுளத்தில். ரெயில் பயணிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

    • தில்லைவிளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.
    • ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிகுளத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நலச்சங்க தலைவர் தாஹிர் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் சங்கரன், செயலாளர் கோவி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், பொருளாளர் அலாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜன், சாகுல் ஹமீது, முருகானந்தம், முகமது அலி ஜின்னா, முகமது மைதீன், குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் தில்லைவி ளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும், பகல் நேரத்தில் செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரசுக்கு காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை பட்டுக்கோட்டை, தில்லைவி ளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக இருமுனைகளில் இணைப்பு ரெயில் விட வேண்டும்.

    தில்லைவிளாகம் ரெயில் நிலையத்திலிருந்து ஈ.சி.ஆர். சாலை வரை தார்சாலை வேலையை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும், ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.

    ரெயில் நிலைய வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் நன்றி கூறினார்.

    Next Story
    ×