search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடி பிறந்த நாளில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான் அய்யப்பன்
    X

    பிரதமர் மோடி பிறந்த நாளில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான் அய்யப்பன்

    • உலக சாதனை படைத்தார்
    • முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்களுக்கான சிகிச்சை,

    என். ஜி. ஓ. காலனி :

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73- வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தலைமையில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்க ளுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல், இஸ்லாமிய பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், மீனவர்களுக் கான முத்ரா கடன் திட்டம், மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட பாரதபிரதமர் மோடியின் 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பார்வைக்காக மத்திய அரசின் நலத்திட்டங் களை பிரதிபலிக்கும் வகை யிலான 73 ஸ்டால் வைக்கப்பட்டு அதன் மூலம் பொது மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தான ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வினை அமெரிக்காவில் இருந்து கிறிஸ்டோபர் என்பவர் வேர்ல்ட் ரிக்கார்ட் யூனியன் என்ற புத்தகத்தில் பதிவு செய்ய நேரில் பார்வையிட்டு மேலும் பிரதமர் மோடியின் 73 திட்டங்களை ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு வழங்கி யமைக்காக நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பனுக்கு உலக சாதனை படைத்தமைக்காக உள்ள சான்றிதழையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு குமரி மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஜெயக்குமார், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் ஜெகநாதன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் மாவட்ட தலை வர்கள் கணேசன், முத்து கிருஷ்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முரளி மனோ கர்லால், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர்கள் வீரசூரபெருமாள், சதீஷ், ஆட்சியம்மாள், தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன்பிள்ளை, மாவட்ட தொழில் பிரிவு தலைவர் டாக்டர் மோகன்ராஜ், பா.ஜ.க. முன்னாள் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செய லாளர் ரூபின், அகஸ்தீஸ்வரம் வடக்கு மண்டல தலைவர் சுயம்பு, முகிலன்விளை மிசா. ரெத்தினஜோதி, பா.ஜ.க. மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளர் பார்வதி விஜயகுமார், அக்ரி சிவா, மற்றும் பயனாளிகள், பொது மக்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×