search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்ட கொடைக்கானல் மலைப்பூண்டு விலை
    X

    விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ள வெள்ளைப்பூண்டு மூடைகள்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்ட கொடைக்கானல் மலைப்பூண்டு விலை

    • புவிசார் குறியீடு பெற்ற ஆண்டு நல்ல விலையில் பூண்டு விற்பனை இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக பூண்டு விற்பனை ரூ.300 வரை மட்டுமே இருந்தது.
    • 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றுலாவை பிரதான தொழிலாக கொண்டிருக்கக் கூடிய நிலையில் கொடைக்கானலை சுற்றி ஏராளமான மலைக் கிராமங்கள் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு முன்னேறி வருகின்றன.

    குறிப்பாக மேல்மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, கூக்கால், மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கொடைக்கானல் மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சந்தைகளில் அதிகம் இடம் பிடித்து வருகின்றன. இதில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.

    புவிசார் குறியீடு பெற்ற ஆண்டு நல்ல விலையில் பூண்டு விற்பனை இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக பூண்டு விற்பனை ரூ.300 வரை மட்டுமே இருந்தது.

    ஆனால் தற்போது மலைப்பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டுகளில் அதிக பரப்பில் பூண்டு விவசாயம் செய்து விலை மிகவும் குறைந்ததால் பலரும் பூண்டு சாகுபடியை கைவிட்டனர். தற்போது நல்ல விலை கிடைத்து வருவதால் மீண்டும் பூண்டு விவசாயத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளனர். தற்போது வரத்து குறைவாக உள்ள போதிலும் கூடுதல் விலை கிடைத்திருப்பது பூண்டு விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    Next Story
    ×