என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
28 காளைகளை அடக்கிய வாலிபருக்கு கார் பரிசு
- விறுவிறுப்பாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கிய வாலிபருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
- சிறந்த காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
மதுரை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர், மண்டல தலைவர்கள் சுவிதா விமல், முகேஷ் சர்மா, புவனேஸ்வரி சரவணன் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, புதூர் பூமிநாதன் மற்றும் ராஜ் சத்யன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், எஸ்ஸார்கோபி, மேற்கு யூனியன் சேர்மன் வீரராகவன், ஈஸ்வரன், கவுன்சிலர் கருப்புசாமி டி.ஆர்.ஓ. பிர்தவுஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்ய ப்பட்ட 280 மாடுபிடி வீரர்களும் 11 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 737 காளைகளும் அவிழ்க்கப்பட்டது.
10சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 3 காளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர்.
விதவிதமான பெயர்க ளில் அவிழ்க்க ப்பட்ட காளைகள் வீரர்க ளுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது.
இதேபோன்று மிரட்டிய காளைகளையும் மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்று சென்றனர். போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் உற்சாகபடுத்தினர்.
போட்டியின் போது திறம்பட விளையாடி 28 காளைகளை அடக்கிய மதுரை சோலைஅழகுபுரம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.
17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரரான மதுரை அவனியாபுரம் கார்த்திக்கு 2-வது பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் மோட்டார் சைக்கிளும், 13 காளைகளை அடக்கிய 3-வது மாடுபிடி வீரரான விளாங்குடி பாலாஜிக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளை களான காத்தனேந்தல் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரது காளை முதலிடம் பிடித்தது. அதன் உரிமையாளருக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிளும், 2-வது சிறந்த காளையான வில்லாபுரம் கார்த்தி என்பவரது காளைக்கு வாஷிங்மெஷின் பரிசும், 3-வது பரிசாக மதுரை அவனியாபுரம் லோடுமேன் முருகன் என்பவரது காளைக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் போட்டியின் போது ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்ப ட்டிருந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையா ளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7.45 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது.
போட்டியின் முடிவில் சிறந்த 3 மாடுபிடி வீரர்களுக்கும், காளை களின் உரிமையாளர் களுக்கும் பரிசுகோப்பை களும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.
போட்டியில் மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், பார்வை யாளர்கள், 3சிறுவர்கள் காளை உரிமையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 61 பேர் காயம டைந்தனர். அவர்களில் சிறுவர், போலீசார் உள்ளிட்ட 11பேர் சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்