என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நாகப்பட்டினம்
- பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
- நாகூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி புனித கொடி ஏற்றத்துடன் தொடங்கி
27. 12. 2023 தேதி புதன்கிழமை புனித கொடி இறக்கத்துடன் நிறைவடைய உள்ளது.
இதில் முக்கிய நிகழ்வாக 23-ம் தேதி சனிக்கிழமை இரவு புனித சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 24 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரவுலாவஷரீபில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஆகவே ரெயில் மூலம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் நாகூர், திருச்சி, சென்னை, பெங்களூர், கொல்லம், ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கவும், காரைக்கால் - சென்னை, காரைக்கால் - எர்ணாகுளம், மன்னார்குடி - சென்னை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும், நாகூர் வழியாக பெங்களூரு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் செல்லும் பாசஞ்சர் ரயில்களும் கூடுதலாக பெட்டி இணைக்க வேண்டும்.
மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அதிக அளவில்கழிவறை வசதி குடிநீர் வசதி ஏற்படுத்திடவும் நாகூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மூலவருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
கார்த்திகை தீபதிருநாளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு மஞ்சள் பொடி பால் தயிர் 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது தொடர்ந்து தேரடியில் அருகே அமைத்திருந்த சொக்கப்பணைக்கு மஞ்சள் பொடி திரவிய பொடி பால் மற்றும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து ஏற்றி வந்த பரணி தீபம் கொண்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முருகப்பெ ருமானுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.
- தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான், குரங்குகள், மட்ட குதிரைகள் முயல், நரி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரமாக கால்முறிந்த நிலையில் ஒரு ஆண் மட்ட குதிரை ஒன்று கிடந்தது. இதுகுறித்து வனச்சரகர் அலுவலக அயூப்கானுக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து, அந்த குதிரை பிடிக்கப்பட்டு வனத்துறையினர், கால்நடை மருத்துவர் சிவசூரியன் மற்றும் மருத்துவ குழுவினர் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். இந்த குதிரைக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து மட்ட குதிரைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குதிரை நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.
தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
- முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் வட்டாரத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவ லகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார இயக்க மேலாளர் அம்பு ரோஸ்மேரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வேதாரண்யம் வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், தோப்புத்துறை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி மற்றும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தி வைத்திருந்தனர்.
பின்பு, ஊட்டச்சத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.
- முகாமில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- சஞ்சீவி பெட்டகம் 3 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு தொடக்கப் பள்ளியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின்படி கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் முன்னிலை வகித்தார். முகாமில் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை,
ஸ்கேன்,பொது மருத்துவம்,கண் மருத்து வம்,பல் மருத்துவம்,சித்த மருத்துவம்,யோகா, பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை,தோல் மருத்துவம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் 1181 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் மணவா ளன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம்,ஊராட்சி துணைத் தலைவர் ஷோபா பாரதி மோகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாள ர்கள், கட்டுமாவடி -பு றாக் கிராமம் ஜமாத் நிர்வாகிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் 3 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
- சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.
- பொதுமக்களுக்கு டெங்கு கொசு பற்றியும், அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
மரைக்கான்சாவடி, தைக்கால் தெரு, ஆற்றங்கரை தெரு, இந்திராநகர், ஆலங்கு டிச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.
இந்த பணிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அலுவலக உதவியாளர் மாதவன் மற்றும் டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று அங்குள்ள குப்பைகள், தேங்காய் மட்டைகள், டயர்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றி கொசு மருந்துகளை தெளித்து பொதுமக்களுக்கு டெங்கு கொசு பற்றியும் அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகளையும் தெரிவித்தனர்.
- 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.
- சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் அறிவு றுத்தலின் பெயரிலும் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.
முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்து வர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன், ஊராட்சி செயலர் பிரகாஷ்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் அழிக்கப்பட்டது.
- அபராத தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம், வெளி ப்பாளையம், மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள பேக்கரியில் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நிறுவனம் சுகாதாரமான முறையில் பேக்கரியை பராமரிக்க வில்லை.
உணவு தயாரிப்பு இடம் சுகாதாரமற்று இருந்தது தெரிய வந்தது.
ஆனால் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்தனர்.
பின்னர் அங்கிருந்த காலாவதியான மற்றும் தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
ஒருவார காலத்திற்குள் உணவு தயாரிக்கும் இடம் சுத்தப்படுத்தி, குறைகள் சரிசெய்து, வெள்ளையடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சுகாதாரக் கேட்டிற்கான அபராதத் தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
- வெயிலோடு சேர்ந்து மிதமான மழை பெய்தது.
- இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் சில நாட்களாக வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் நாகையில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், வெயிலோடு சேர்ந்து மிதமான மழையும் பெய்தது.
நாகை, நாகூர், சிக்கல், புத்தூர், வடகுடி, தெத்தி, மேலநாகூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெயிலோடு சேர்ந்து பெய்த மிதமான மழை காரணமாக ரம்மியமான சூழல் நிலவியது.
கனமழை ஓய்ந்தாலும் நாகையில் வெயிலோடு சேர்ந்து மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பொதுமக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
- வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் 108 அவசர கால விபத்து முதலுதவி செயல் விளக்கம் அளிப்பது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் மேலாளர்கள் சாம் சுந்தர், சவுரிராஜன் தலைமையில் நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை விபத்தில் முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செய்முறை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, அனைத்து ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்களும் வாகன ஓட்டுனர்களும் மற்றும் பொதுமக்களுக்கு கலந்து கொண்டனர்.
- திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இறால் உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கான"ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்"கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்பிடா), தேசிய நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் 100 மேற்பட்ட இறால் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.
நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கு ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்" பாதிப்புகள் மற்றும் இந்திய கடல் உணவு ஏற்றுமதியில் அதன் தாக்கம் குறித்து வல்லுனர்களைக் கொண்டு காணொளி வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட இறால் வளர்க்கும் விவசாயிகள் தமிழ்நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் தங்களுக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் வழங்குவது போல் இறால் உற்பத்தியாளர்களுக்கும் டீசல் மற்றும் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும்.
இயற்கை பேரிடரில் இறால் உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் இணைக்க வேண்டும்.
இறால் உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் எம்பிடா மண்டல துணை இயக்குநர் நரேஷ் விஷ்ணு தம்படா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்,
அதனை தொடர்ந்து சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகண்ணன்,
நாகை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், நாகை மாவட்ட இறால் வளர்ப்போர் கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம் மற்றும் செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தலைஞாயிறு அரிச்சந்திராநதியின் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.
- விவசாயிகள் களப்பணியால் முற்றிலும் அகற்றினார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம், மணக்குடி ஊராட்சியின் வழியாக பாயும் அரிச்சந்திரா நதியின் காடந்தேத்தி முதல் பிரிஞ்சுமூலை வரையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை விவசாயிகள்மூன்று நாட்கள் களப்பணியால் முற்றிலும் அகற்றினார்.
இக்களப்பணியில் விவசாயிகள்இராசேந்திரன் தலைமையிலும், முருகவேல் ஆதிகேசவன் ஜெயவேல், ஆக்கிரமித்து இருந்த ஆகாயத் தாமரை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
ஆகாயத்தாமரையே தானாகவே முன்வந்து அகற்றிய விவசாயிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்