என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டி அருகே போதை மறுவாழ்வு மையம் சார்பில் பனை விதை நடும் விழா
- பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குளத்தில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார்.
தேனி:
ஆண்டிபட்டி யூனியன், திருமலாபுரம் ஊராட்சி, பந்துவார்பட்டி விலக்கு அருகே செயல்பட்டு வரும் அர்ப்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் மற்றும் சுருளிபட்டி சங்கமம் அறக்கட்டளை சார்பில் பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குளத்தில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கி பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் வரதராஜன், சங்கமம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், சுருளிபட்டி அன்புராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அர்ப்பணம் மறுவாழ்வு மையம் இயக்குனர் சதிஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பி.ஏ.ஐ., மாநில தலைவர், தொழிலதிபர் ஜெகநாதன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அர்ப்பணம் மறுவாழ்வு மையம் இணை இயக்குனர் வனிதா சதிஷ் நன்றி கூறினார்.