என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- தி.மு.க.வினரை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- 8-ந்தேதி நடக்கிறது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அ.தி.மு.க.வினர், எஸ்.பி. ஷ்யாம்ளாதேவியை சந்தித்து, கடந்த 30-ந்தேதி நடந்த கல்குவான் ஏலத்திற்கான டெண்டரின் போது அரசு அதிகாரிகளை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கோரி மனு கொடுத்தனர்.
பின்னர் அ.தி.மு.க .மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறும்போது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி கனிமம் மற்றும் சுரங்கம் புவியியல் துறை சார்பில், கல்குவாரி ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஜனநாயக முறைப்படி கலந்துகொள்ள வந்தவர்களை 300க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி போக்குவரத்து துறை அமைச்சர் நேர்முக உதவியாளர் மகேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சண்டையிட்டு அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் அரசு அதிகாரிகளும், போலீசாரும், நிருபர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டரே நேரில் வந்து கலவரம் நடக்கும்போது கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்த போதும் அவரையும் ஒருமையிலே மிரட்டியும், டெண்டர் போட வந்தவர்களை அரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டிய கோரக்காட்சி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரங்கேறியது. இந்த செயலை அ.தி.மு.க .சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரின் செயலை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரும் 8-ந்தேதி காலை 10 மணியளவில் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
மனு கொடுத்தபோது, மாவட்ட நிர்வாகிகள் குணசீலன் ராஜாராம், ராணி, வீரபாண்டியன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.