search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    க.எறையூர் மலை பகுதிகளில் புதிய கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    க.எறையூர் மலை பகுதிகளில் புதிய கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

    • இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே க.எறையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட க.எறையூர் கிராமத்திற்கு அருகே உள்ள மலை பகுதிகளில் அதிகமாக கல் குவாரிகள் உள்ளது. இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நீகல் குவாரிகளில் இருந்து அதிக வேகத்தில் செல்லும் லாரிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படுகிறது. மேலும் கற்கள், மண் அள்ளி செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது சாலையின் இருபுறமும் கற்கள், மண் கீழே விழுவதால் சாலைகள் பழுதாகி உள்ளது. அதை முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்திருந்தனர்.

    பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ரகு கூறுகையில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது, கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும். வரும் 30ம் தேதி புதிய கல்குவாரி ஏலம் விடப்படுகிறது. அந்த ஏலத்தினை நடத்தக்கூடாது , நடத்தும் பட்சத்தில் பொதுமக்கள் சார்பில் எங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு ஏலம் விடப்படும் கல் குவாரிகளிலே சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×