search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரத்தில் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
    X

    விளையாட்டுப் போட்டிகளை பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பென்னாகரத்தில் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

    • பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகள போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகள போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாங்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். மாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், துணை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுப் போட்டிகளை பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என 100 பள்ளிகளை சேர்ந்த 1350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இங்கு வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் பொறுப்பு தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், தமிழ் ஆசிரியர் முனியப்பன் உள்ள ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாங்கரை உடற்கல்வி ஆசிரியர் குப்பாகவுண்டர் நன்றி கூறினார். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் செய்யப்பட்டது.

    Next Story
    ×