search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மூர் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ஏற்பாடு
    X

    அம்மூர் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ஏற்பாடு

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • ரூ.18.80 லட்சத்தில் மழை நீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள முடிவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் தொடக்கப் பள்ளி இரு வகுப்பறை கட்டிடங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சி சாதாரணக் கூட்டம் நேற்று அதன் தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் உஷாராணி அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் மனோகரன் வரவேற்றார். கூட்டத்தில் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் விவரம் வருமாறு:-

    இந்த சாதாரண கூட்டத்தில் அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதியதாக 2022-2023 ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் இரு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது.மேலும் அம்மூர் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் ரூ.7.95 லட்சம் மதிப்பீட்டில் வின்ட்ரோ பிளாட்பாரம் மற்றும் மேற்கூரை அமைப்பது.

    மேலும் பேரூராட்சி பொது நிதியில் ரூ.18.80 லட்சத்தில் மழை நீர் வடிகால்வாய் கல்வெட்டு பணிகள் மேற்கொள்வது. அம்மூர் பேரூராட்சி பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, பல்வேறு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் தெருக்களுக்கு பெயர் உடன் கூடிய பலகைகள் வைப்பது, அம்மூர் பேரூராட்சியில் உள்ள ரயில்வே பாலத்தின் மூலம் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் எதிர்கா லத்தின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை போக்க மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட கலெக்டர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது, மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் சுடுகாடு பாதைக்கு வேலி அமைத்தல் சிறு பாலம் அமைத்தல், பைப் லைன் அமைத்து சிறு மின்விசை பம்பு அமைத்தல், சாலை அமைத்தல் சுகாதார வளாகம் சீரமைத்தல் தெருவிளக்குகள் அமைத்தல் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×