என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
- மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம்
- சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம்
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசிரா மணி பழக்ககாரன்காடு சோழீஸ்வரர் கோவில் உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம் நடைபெறும்.
மேலும் சங்கடகர சதுர்த்தி, சஷ்டி கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் பெறும்.
இந்த நிலையில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தேவூர் சென்றாயனூர், பெரமாச்சி பாளையம், காணியாளம்பட்டி வெள்ளாள பாளையம், சுண்ணாம்புக்க ரட்டூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணித்தாசனூர், குள்ளம்பட்டி மயிலம்பட்டி, காணியாளம்பட்டி, எடப்பாடி, கொட்டாயூர், வட்ராம்பா ளையம், பூமணியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு பூஜை செய்தனர்.