என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம்
- தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
- மேலும் கூட்டத்தில் அத்தியாவசிய திட்டப்பணிகள் குறித்த செலவுகளுக்கு தீர்மானம் நிறைவேற்றபட்டது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்றத்தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கடந்த 3 மாதங்களில் சுகாதார பணிகளுக்கு தேவையான பினாயில், சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதற்கான அனுமதி கோரி மன்ற பொருளில் அனுமதிக்கு வைக்கப்பட்டது.
அப்போது கடந்த 3 மாதங்களில் மன்ற உறுப்பினர்கள் யாருடைய அனுமதியும் இன்றி பல லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டுவதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியம், ருக்மணி, சின்னுசாமி, தமிழ்செல்வி ஆகியோர் ஆணையாளரிடம் வாக்குவாதம் செய்தனர் .
இதை தொடர்ந்து பொருட்கள் வாங்கியதற்கான பில் மற்றும் கணக்குகள் குறித்து ஆதாரத்துடன் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அமைதியாக அமர்ந்தனர். மேலும் கூட்டத்தில் அத்தியாவசிய திட்டப்பணிகள் குறித்த செலவுகளுக்கு தீர்மானம் நிறைவேற்றபட்டது.