என் மலர்
உள்ளூர் செய்திகள்
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் குவிந்தனர்
- 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
- வி.ஐ.பி.கள் வழக்கம் போல் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணையை முன்னிட்டு 2-வது நாளாக நேற்று ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலையில் 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள மகா தீபம் ஏற்றப்படும் அண்ணா மலையை திரலானா பக்தர்கள் வலம் வந்தனர்.
ஆனி மாத பவுர்ணமி நாளை குரு பூர்ணிமா என கூறப்படுவதால் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தமிழக பக்தர்களுக்கு இணையாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பக்தர்கள் குவிந்தனர்.
விடுமுறை நாளான நேற்று முன்தினம் தமிழக பக்தர்கள் வந்து சென்ற நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பக்தர்கள் 2-வது நாளாக திருவண்ணாமலைக்கு வருகை தந்தும் வந்தவர்கள் முகாமிட்டும் உள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதை முழுவதும் தெலுங்கு மொழி பேசும் பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர்.
இதேபோல கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் கணிசமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா என 4 மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணா மலை அண்ணாமலையார் கோவிலில் 2-வது நகலாக குவிந்தனர்.
தேரடி வீதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்கள் அதிகம் பொது தரிசன பாதையில் தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
வி.ஐ.பி.கள் வழக்கம் போல் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.