என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின்கசிவால் குடிசை வீடு எரிந்தது
Byமாலை மலர்13 Nov 2023 1:40 PM IST
- மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியபோது விபரீதம்
- தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஓட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மயிலா (வயது 60). இவர் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இவரது குடிசை வீட்டின் மேலே மின் ஒயர் செல்கிறது. நேற்று அந்த பகுதியில் லேசான காற்று அடித்தது. அப்போது மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசியது தீப்பொறி குடிசை வீட்டின் மீது விழுந்தது.
குடிசை தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீயில் கருகி நாசமானது.
Next Story
×