search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாஹாளய அமாவாசைதிருச்சி காவிரி படித்துறைகளில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்
    X

    மாஹாளய அமாவாசைதிருச்சி காவிரி படித்துறைகளில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்

    • மாஹாளய அமாவாசை
    • திருச்சி காவிரி படித்துறைகளில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்


    திருச்சி.


    புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மகாளய அமாவாசை தினமான புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதும், இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகளும், தான தர்மங்களும் நம் முன்னோர்களை மோட்சத்தை அடைய செய்யும் என்பது நம்பிக்கை. அதனாலேயே மகாளய அமாவாசையை சர்வபித்ரு மோட்ச அமாவாசை என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் புரட்டாசி மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.


    மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து, அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து காவிரியில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.


    தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை தானமாக வழங்கினர்.


    இதேபோல் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள கருட மண்டபம், கீதாபுரம் படித்துறை, திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், முக்கொம்பு உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் புரட்டாசி சனிக்கிழமை அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


    தொடர்ந்து தர்ப்பணம் கொடுத்தவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.


    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகை தந்ததால், அம்மா மண்டபம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்து திருவனைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் செல்கின்றன.





    Next Story
    ×