search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் அழிந்து வரும் கிவி பழங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
    X

    கிவி பழங்கள் விளைவிக்கப்படும் தோட்டக்கலை பழப்பண்ணை.

    கொடைக்கானலில் அழிந்து வரும் கிவி பழங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

    • கிவி பழ வகை நாற்றுக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி காணப்படுகிறது.
    • கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ், பிச்சீஸ், ஆப்பிள் உள்ளிட்ட நாற்றுகளும் முறையாக பராமரிக்கப்படு வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஃபேரிபால்ஸ் பகுதியில் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு பல்வேறு பழ வகைகள் மட்டுமின்றி உரங்கள் தயாரிப்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கொடைக்கானல் பகுதி விவசாயிகளுக்கு பழவகை நாற்றுகளும் விற்பனைக்கு கொடுக்கப்படும்.

    இந்த சூழலில் வெளிநாடு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழ வகையான கிவி பழங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து விவசாயிகளுக்கும் இந்த பழ வகை நாற்றுக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி காணப்படுகிறது.

    கிவி பழம் கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த தடுப்பு மருந்தாக உள்ள நிலையில் இவ்வகை பழங்கள் கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையப்பகுதியில் அழியும் நிலையில் உள்ளது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பகுதி முழுவதிலும் முறையான பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ், பிச்சீஸ், ஆப்பிள் உள்ளிட்ட நாற்றுகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    எனவே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை முறையாக பராமரித்து அழிந்து வரும் கிவி பழங்களை மீட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×