search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்மன அள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் சிறையில் அடைப்பு
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோவையும், கைது செய்யப்பட்ட வாலிபரையும் படத்தில் காணலாம்.

    செம்மன அள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் சிறையில் அடைப்பு

    • 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன்அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து முனியப்பனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குநர் வன்னியப்பெருமாள் உத்திரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீசார் வாகனச்சோதனை நடத்தி னர்.

    இதில் செம்மன அள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன்அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    ஆட்டோவை ஓட்டி வந்த கோட்டை வைரவள்ளியை சேர்ந்த கணேசன் மகன் முனியப்பனை கைது செய்து போலீசார் விசாரித்ததில் அவர் மேலும் பதுக்கி வைத்திருந்த 620 கிலோ ரேசன் அரிசியையும் கைப்பற்றினர்.

    கைப்பற்றப்பட்ட 1020 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்து முனியப்பனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×