search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    வீட்டில் இருக்க வேண்டிய காய்
    X

    வீட்டில் இருக்க வேண்டிய காய்

    • இருமல் காமாலை புண்கள் வயிற்று வாயு என ஏராளமான நோய்களை குணப்படுத்துகிறது.
    • அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உலர வைத்து பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது.

    ஆறு சுவை உள்ள ஒரே கனி கடுக்காயாகும்... வசம்பு, விளக்கெண்ணெய், மாசிக்காய் போல கடுக்காய்க்கும் பிள்ளை வளர்த்தி என்ற பெயர் உண்டு... கடுக்காய் வயிற்றுப் புண்கள் ஆற்றி பசியை தூண்டுகிறது.. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது .. உடலில் வாத பித்த கபத்தை சமன் செய்கிறது.. இருமல் காமாலை புண்கள் வயிற்று வாயு என ஏராளமான நோய்களை குணப்படுத்துகிறது..

    கடுக்காய்க்குள் உள்ள விதையை நீக்கி விட்டு மேலே உள்ள தோலை பொடி செய்து அப்படியே சாப்பிடலாம். ஆனால் அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து உலர வைத்து பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது.. சோற்றுக்கற்றாழை சாரில் ஊறவைத்து உலர வைத்து பொடி செய்து சாப்பிடுவது இன்னும் சிறந்தது...

    சுத்தம் செய்த கடுக்காய் தோலை இரண்டு மிளகின் அளவு பாக்கு சப்பி சாப்பிடுவது போல் சாப்பிட ஜீரணம் நன்றாகி வயிற்றில் உள்ள வாயு வெளியேறி உடல் உறுதி பெறும்..

    கால் ஸ்பூன் முதல் 1/2 ஸ்பூன் வரை தினமும் இரவு உணவிற்கு பின் சுடுநீரில் கலந்து சாப்பிட காலையில் மலச்சிக்கல் இல்லாமல் மலம் வெளியேறும்..

    கடுக்காய் பொடியை தேன் கலந்து சாப்பிட சளியும் நெய் கலந்து சாப்பிட மூலமும் குணமாகும்...

    பல் விளக்குவதற்கு ஆறாத புண்களை ஆற்றுவதற்கு பிறப்புறுப்பில் ஏற்படும் நாற்றங்களை சரி செய்வதற்கு பெருவயிறு (ascities), வயிறு வீக்கம், காமாலையை குணமாக்குவதற்கு என நிறைய பலன்கள் உண்டு... கடுக்காயை ஊறுகாயாக சாப்பிட ஜீரண கோளாறு கை கால் வலிகள் முழுவதுமாக நீங்கும்...

    ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியது கடுக்காய் ..

    -ரியாஸ்

    Next Story
    ×