என் மலர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
மாநிலங்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
Byமாலை மலர்26 July 2022 3:30 PM IST (Updated: 26 July 2022 5:54 PM IST)
- விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
- தி.மு.க. உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் காங்கிரஸ், தி.மு.க, டி.ஆர்.எஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து பதாகைகளைக் காட்டி கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களான கனிமொழி, என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், டி.ஆர்.எஸ். மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10க்கு மேற்பட்ட எம்.பி.க்களை தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை துணைத்தலைவர் அறிவித்தார்.
மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256-ன் கீழ் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.
நேற்று மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X