என் மலர்
செய்திகள்
X
பூர்வாஞ்சல் விரைவு சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Byமாலை மலர்16 Nov 2021 4:19 PM IST (Updated: 16 Nov 2021 7:30 PM IST)
லக்னோவில் இருந்து கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் பூர்வாஞ்சல் விரைவு சாலை சுமார் 22,500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் 341 கி.மீட்டர் நீளத்திற்கு விரைவு சாலை கட்டப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த சாலை கட்டப்பட்டுள்ளது.
இந்த சாலையில் 3.2 கி.மீ. நீளத்திலான விமானப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த சாலையை திறந்து வைக்க ஹெர்குலஸ் ராணுவ விமானத்தில் வந்து இறங்கினார். பின்னர் சாலையை திறந்து வைத்தார். இதே சாலையில் இந்திய போர் விமானம் ஏ.என்.-32 தரையிறங்கியது.
சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி ‘‘பூர்வாஞ்சல் விரைவு சாலைக்கு நான் 3 வருடத்திற்கு முன் அடிக்கல் நாட்ட வரும்போது, ஒருநாள் இங்கு விமானம் மூலம் வந்து தரையிறங்குவேன் என்று நினைத்து பார்க்கவில்லை’’ என்றார்.
Next Story
×
X