search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இன்ஸ்டாவில் 5.6 மில்லியன் பாலோயர்ஸ்.. தேர்தலில் வெறும் 155 ஓட்டு வாங்கிய பிக்பாஸ் பிரபலம்
    X

    இன்ஸ்டாவில் 5.6 மில்லியன் பாலோயர்ஸ்.. தேர்தலில் வெறும் 155 ஓட்டு வாங்கிய பிக்பாஸ் பிரபலம்

    • மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
    • ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 224 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 53 இடங்களிலும் பிற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததுள்ளார்.

    ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார். அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்விடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தொகுதியில் பாஜக பாஜக வேட்பாளரை தோற்கடித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே) வேட்பளார் ஹரூன் கான் வெற்றி பெற்றார்.

    Next Story
    ×