என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
`சவப்பெட்டி ஊர்வலம்'.... மணிப்பூரில் நீடிக்கும் பதட்டம்-கூடுதல் படைகள் குவிப்பு
- பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து திரண்டனர்.
இம்பால்:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின மக்கள் என்ற அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கு மணிப்பூரில் வாழும் பாரம்பரிய குகி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு இன மக்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.
இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் வன்முறை வெடித்தது. அன்று இரவு குகி பழங்குடியினத்தை சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து குகி பழங்குடியின மக்கள் ஆத்திரம் அடைந்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தஇயலவில்லை. சமீபத்தில் 3 பெண்கள், 3 குழந்தைகளை கடத்தி சென்றனர். அவர்களை சுட்டுக்கொன்று உடல்களை வீசினார்கள்.
இதனால் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. நேற்று இரவும் கலவரம் நீடித்தது. இன்று காலை பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மணிப்பூரில் அமைதி திரும்பாமல் பதட்டம் ஓயாத நிலை ஏற்பட்டுள்ளது.
குகி பழங்குடியின மக்கள் இன்று (செவ்வாய் கிழமை) சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவதாக அறிவித்தனர். கடந்த 11-ந் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரின் உடல்கள் பழங்குடியின மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த உடல்களை தகனம் செய்ய அவர்கள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவதாக அறிவித்தனர். இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
அதை ஏற்று மணிப்பூரில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து திரண்ட னர். இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
தற்போது வரை அங்கு 218 சி.ஏ.பி.எப். பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநர் ஏ.டி.சிங் உள் ளிட்ட மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ள னர்.
இதையடுத்து, மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப் படுத்த மேலும் 50 படைப் பிரிவுகளைக் கொண்ட 5,000 துணை ராணுவப் படையினரை விரைவில் அனுப்ப உள்துறை அமைச்ச கம் முடிவெடுத்துள்ளது.
மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகம், பொருளா தாரம் மற்றும் புள் ளியியலுக்கான இயக்கு னரகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு, மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு நேற்று போராட்டத்தை தொடங்கியது.
குகி பழங்குடியினர் மீது ராணுவ நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி காலவரை யற்ற மறியல் போராட்டத்தையும் அந்தக் குழு மேற்கொண்டு வருகிறது. தலைநகர் இம்பால் முழு வதும் மைதேயி போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட பொருள்கள் சிதறிக் கிடக் கின்றன.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அசாம் ரைபிள்ஸ் படையினர் எல்லை பாதுகாப்புப் படையினர், மாநில காவல் துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு விஷ்ணுபூர், தெனபால், காக்சிங் ஆகிய 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கு, காங்போக்பி மற்றும் சூர்சந்த்பூர் ஆகிய மாவட் டங்களில் இணைய மற்றும் கைபேசி சேவைகளுக்கு நாளை வரை மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது.
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து பிரேன் சிங் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்