என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக் அமலாக்கத்துறையினரால் கைது
- கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திகார் சிறைக்குள் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
- வாக்குமூலத்தை பதிவு செய்ய மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களும் எடுத்துச்செல்லப்பட்டன.
புதுடெல்லி:
ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட மறுநாள் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
அதன் பின்னர் ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. குடோன்களிலும் சோதனை நடந்தது. ஜாபர் சாதிக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது வழக்கு சம்பந்தப்பட்ட பல ஆவணங்களும், வாக்குமூலங்களும் பெறப்பட்டன.
இதற்கிடையே கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திகார் சிறைக்குள் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பட்டியாலா சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுதிர்குமார் சிரோஹி அனுமதியை பெற்று இந்த விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது விசாரணை முழுமையாக முடிக்கப்படவில்லை.
இதனால் விசாரணையை மீண்டும் நடத்த அதே கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அனுமதி பெற்றனர். ஜூன் 25 மற்றும் 26-ம் தேதிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. பணமோசடி தடுப்புச்சட்டம் பிரிவு-50-ன் கீழ் வழங்கப்பட்ட அந்த அனுமதியின்பேரில் அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று ஜாபர் சாதிக்கிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.
வாக்குமூலத்தை பதிவு செய்ய மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களும் எடுத்துச்செல்லப்பட்டன. இந்த விசாரணையைத் தொடர்ந்து வாக்குமூலம் பதிவு ஆவணங்களில் அவரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்க அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்