என் மலர்
இந்தியா

12 லட்சம் பேரை கவர்ந்த தாத்தா-பேத்தி வீடியோ

- சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ இதுவரை 12 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களின் பார்வையைப் பெற்றுள்ளது.
- பலரும் தங்கள் தாத்தா பாட்டியுடனான உறவு குறித்து உணர்வுப்பூர்வமான கருத்துகளை பதிவிட்டனர்.
பேரக் குழந்தைகளுக்கும் தாத்தா-பாட்டிக்கும் இடையே இனம்புரியாத பாசப்பிணைப்பு இருக்கும். குழந்தைகளுக்கு அழகிய கதைகளைச் சொல்லி அறிவு, பண்பாடு, நற்பண்புகளை ஊட்டுவார்கள். குழந்தைகளும் தாத்தாபாட்டியுடன் இருக்கும்போது அதிக மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.
சமூகவலைத்தளத்தில் 96 வயது தாத்தா ஒருவர், தனது பேத்தியுடன் விளையாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. வீடியோவில் 2 வயது பேத்தி நவ்யா, தனது தாத்தாவுக்கு விலங்கு பொம்மைகளை கொடுத்து விளையாடுகிறார். தாத்தா பொக்கைவாய் சிரிப்புடன் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.
இது வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ''உண்மையான பந்தத்திற்கு வயது தெரியாது'' என்ற பதிவுடன் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ இதுவரை 12 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களின் பார்வையைப் பெற்றுள்ளது. ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். பலரும் தங்கள் தாத்தா பாட்டியுடனான உறவு குறித்து உணர்வுப்பூர்வமான கருத்துகளை பதிவிட்டனர்.