search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ராஜினாமா செய்யமாட்டேன்: சித்தராமையா திட்டவட்டம்
    X

    ராஜினாமா செய்யமாட்டேன்: சித்தராமையா திட்டவட்டம்

    • ஹெச்.டி. குமாரசாமி மந்திரியாக உள்ளார்.
    • அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டப் பிறகு அவர் ஜாமின் பெற்றுள்ளார்.

    முடா மோசடி தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அளித்த உத்தரவு செல்லும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து முறைகேடு தொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனால் சித்தராமையா தனது முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் சித்தராமையா பதில் அளித்து கூறியதாவது:-

    நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். ஹெச்.டி. குமாரசாமி மந்திரியாக உள்ளார். அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டப் பிறகு அவர் ஜாமின் பெற்றுள்ளார். அவர் பிரதமர் மோடியின் மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளார்.

    இதெல்லாம் நமது அரசியலை சீர்குலைப்பதற்கான அரசியல் வேலை. அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். லோட்டஸ் ஆபரேசனை முயற்சி செய்தார்கள். அது தோல்வியடைந்தது. ஏனென்றால் எங்களிடம் 136 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.

    ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை இல்லாமல் இரண்டு முறை ஆட்சி அமைத்தார்கள். எடியூரப்பா வெற்றி பெற்றாரா? நாங்கள் சட்டப்பூர்வமாக போரிடுவோம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    Next Story
    ×