search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகா கும்பமேளா விழா நிறைவு: பிரதமர் மோடி, பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி தெரிவித்த யோகி ஆதித்யநாத்
    X

    மகா கும்பமேளா விழா நிறைவு: பிரதமர் மோடி, பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி தெரிவித்த யோகி ஆதித்யநாத்

    • 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியுடன் நிறைவு பெற்றது.
    • 66 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    மகா கும்பமேளா விழா கடந்த மாதம் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட குவிந்தனர்.

    45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா விழா சிவராத்திரியான நேற்று இரவுடன் முடிவடைந்தது. இந்த 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இந்த 45 நாட்களும் பிரயாக்ராஜ் நகர் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. பக்தர்களின் அலைமோதிய கூட்டத்தால் பிரயாக்ராஜ் மக்கள் மிகவும் அவதிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்த நிலையில் மகா கும்பமேளா விழா முடிவடைந்ததையொட்டி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுடன் சேர்ந்து பிரயாக்ராஜ் சென்றார். அங்கு கங்கை நிதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

    பின்னர் அவர் பேசும்போது பிரயாக்ராஜ் மக்களை பெரிதும் பாராட்டினார். மகா கும்பமேளா குறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

    எந்தவொரு தயக்கம், சிரமமின்றி கும்பமேளா விழாவை தங்கள் வீட்டி விழாவாக கருதிய பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களுடைய உபசரிப்பு பாராட்டுக்குரியது.

    மகா கும்பமேளா விழா சுமூகமாக நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் சிறப்பான முறையில் மகா குமப்மேளா நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. சாதுக்கள் உள்பட 66 கோடி பக்தர்கள் புனித சங்கமத்தில் நீராடினர்.

    பிரயாக்ராஜ் மேளா ஆணையம், நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சரியான ஆதரவும் இருந்தால், எந்த முடிவையும் அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அதன் விளைவு இன்று இந்த வடிவத்தில் நம் முன் வந்துள்ளது.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×