search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா- சீனா போர் குறித்து மணிசங்கர் அய்யர் சர்ச்சை பேச்சு: விலகிக்கொண்ட காங்கிரஸ்
    X

    இந்தியா- சீனா போர் குறித்து மணிசங்கர் அய்யர் சர்ச்சை பேச்சு: விலகிக்கொண்ட காங்கிரஸ்

    • 1962-ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலை சீன படையெடுப்பு என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • மணிசங்கர் அய்யரின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் புதுடெல்லியில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் கிளப்பில் 'நேருவின் முதல் ஆட்சேர்ப்பு' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில்,

    1962-ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலை சீன படையெடுப்பு என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மணிசங்கர் அய்யரின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது. மணிசங்கர் அய்யர் வரலாற்றை திரித்து கூறுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மணிசங்கர் அய்யர் இந்த சர்ச்சை பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மேலும் மணிசங்கர் அய்யர் கருத்தில் இருந்து காங்கிரஸ் விலகி நிற்பதாக அவர் கூறினார்.

    மேலும் இதுபற்றி மணிசங்கர் அய்யர் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு நிருபர்கள் கிளப்பில் 'சீனப் படையெடுப்பு'க்கு முன்னர் 'குற்றம் சாட்டப்பட்ட' என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதற்காக நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×