என் மலர்
இந்தியா
அல்லு அர்ஜூன் விவகாரத்தில் யாருடைய தலையீடும் இருக்காது: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
- ஐதராபாத் போலீசாரால் அல்லு அர்ஜூன் இன்று கைது செய்யப்பட்டார்.
- தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் இன்று கைது செய்யப்பட்டது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத் போலீசார் இன்று காலை அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றம் அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில், தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
இதற்கிடையே பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் ராம ராவ், அல்லு அர்ஜூன் கைது தேவையற்றது. பொதுவான குற்றவாளிகளை போன்று அல்லு அர்ஜூனை நடத்துவது பொருத்தமற்றது என தெலுங்கான காங்கிரஸ்க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
அல்லு அர்ஜூன் கைதை பா.ஜ.க. தலைவர்களும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜூன் கைது விவகாரத்தில் யாருடைய தலையீடும் இருக்காது. சட்டம் தன் கடமையை செய்யும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு டீம் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது 105 (கொலைக்கு உரியதல்ல ஆனால் குற்றமிழைக்கக் கூடிய கொலை) மற்றும் 118(1) (காயம் உண்டாக்குதல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது. தியேட்டர் உரிமையாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.