search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
    X

    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

    • பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படட்டதாக தெரிவித்தனர்.
    • மிரட்டல்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மின்னஞ்சல்கள் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகளின் கூறும்போது, வசந்த் விஹார் மற்றும் ஆர்.கே. புரம் ஆகிய இடங்களில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, ப்ளூ பெல்ஸ் மற்றும் தாகூர் இன்டர்நேஷனல் ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படட்டதாக தெரிவித்தனர்.

    பள்ளி வளாகத்தில் ஏராளமான வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நகரில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட முந்தைய போலி வெடிகுண்டு மிரட்டல்களைப் போலவே, இந்த மிரட்டல்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில்மிகவும் ஆபத்தான வெடிபொருட்கள் இருப்பதாக மின்னஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. "பள்ளிக்குள் நுழையும் மாணவர்களின் பைகளை நீங்கள் கடுமையாக சரிபார்க்காதது எங்கள் திட்டத்தை நிறைவேற்ற சரியான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது" என்று மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    கடந்த ஆண்டு தேசிய தலைநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன, பின்னர் அவை புரளியாக மாறின. கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி, டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, பஸ்சிம் விஹார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபர் ஒரு தனியார் பள்ளியின் மாணவர் என்பதை அடையாளம் கண்டது.

    Next Story
    ×