search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தென்னிந்தியாவின் முதல் Underground AC market பெங்களூருவில் திறப்பு
    X

    தென்னிந்தியாவின் முதல் Underground AC market பெங்களூருவில் திறப்பு

    • சந்தை முழுவதும் குளிரூட்டப்பட்டதாகும்.
    • டெல்லியில் பாலிகா பஜார் போன்று கட்டப்பட்டுள்ளது.

    விஜயநகர் மெட்ரோ நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகே ரூ.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாலிகே பஜாரை கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மற்றும் விஜயநகர் எம்.எல்.ஏ. எம். கிருஷ்ணப்பா ஆகியோர் நேற்று முன்தினம் (25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தனர். இந்த சந்தை முழுவதும் குளிரூட்டப்பட்டதாகும்.

    இதன் மூலம் தென்இந்தியாவில் பூமிக்கடியில் குளிரூட்டப்பட்ட சந்தை கொண்ட முதல் நகரம் என்ற பெருமையை பெங்களூரு பெற்றுள்ளது. டெல்லியில் புகழ்பெற்ற பாலிகா பஜார் இது போன்று பூமிக்கடியில் முற்றிலும் ஏசி வசதி கொண்ட மார்க்கெட்டை பெற்றுள்ளது.

    இதே போன்ற மார்க்கெட்டை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 16-ம் நூற்றாண்டின் விஜய நகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் பெயர் இந்த சந்தைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தை 1,365 சதுர மீட்டர் பரப்பளவு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 79 கடைகள் உள்ளன.


    சந்தையில் ஒருங்கிணைந்த ஏர் கண்டிஷனிங் இருந்தாலும் 31 கடைகளில் தனித்தனியாக ஏர் கண்டிஷனிங் உள்ளது. ஒவ்வொரு கடையும் 9 சதுர மீட்டர் அளவு கொண்டதாகும். இந்த சந்தையை பரிசிதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் கட்டியது.

    பாலிகே பஜார் அமைப்பதற்காக 2017-18-ம் ஆண்டில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர் 2021-22-ம் ஆண்டில் கூடுதலாக ரூ.8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.


    இந்த பாலிகே பஜாரில் 8 நுழைவு வாயில்கள், 145 விளக்குகள், 2 எஸ்கலேட்டர்கள் மற்றும் ஒரு லிப்ட் வசதியும் உள்ளது. தீயணைப்பு கருவிகள் மற்றும் மின்மாற்றியும் பொருத்தப்பட்டுள்ளது. நிலத்தடி சந்தைக்கு மேலே உள்ள பகுதி தெரு ஷாப்பிங்கிற்கு நன்கு அறியப்படாத இந்த திட்டம் குடியிருப்பாளர்களுக்கு உதவும்.

    Next Story
    ×