search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு முன் ஜாமின்
    X

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு முன் ஜாமின்

    • டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி.
    • விமான நிலையம் வந்தடைந்த ராகுலை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கர்நாடகா பா.ஜ.க. சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை கடைசியாக கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல்-மந்திரி சித்தராமையா, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முதல்-மந்திரி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

    ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வக்கீல், அவர் நேரில் ஆஜராக வாய்தா கேட்டார். இதையடுத்து 7-ந்தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார் ராகுல் காந்தி. விமான நிலையம் வந்தடைந்த ராகுலை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    இதன்பின்னர், நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்திக்கு முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×