search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கர் அருகே தன்னை கடித்த நாகப்பாம்பை கடித்துக்கொன்ற சிறுவன்
    X

    சத்தீஸ்கர் அருகே தன்னை கடித்த நாகப்பாம்பை கடித்துக்கொன்ற சிறுவன்

    • ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.
    • விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது.

    ராய்ப்பூர்:

    பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் தன்னை கடித்த பாம்பை சிறுவன் ஒருவன் கடித்துக்கொன்ற வினோத சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.

    அங்குள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.

    இப்பகுதியில் 200 வகையான பாம்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுவன் தீபக்ராம் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கே விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது.

    இதனால் வேதனையடைந்த சிறுவன் கையை உதறினான். ஆனாலும் பாம்பு விடாமல் கையை சுற்றியதால் ஆவேசம் அடைந்த சிறுவன் அந்த பாம்பை பலமுறை திரும்ப கடித்தான். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது. இதற்கிடையே சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சிறுவனை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அங்கு சிறுவனுக்கு விஷ முறிவு மருந்துகள் செலுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுவன் நலமாக உள்ளான்.

    இதுகுறித்து பாம்பு நிபுணர் கைசர் ஹுசைன் கூறுகையில், தீபக்ராமை பாம்பு கடித்ததும் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இத்தகைய பாம்புக் கடிகள் வலிமிகுந்தவை. கடித்த பகுதியில் மட்டுமே அறிகுறிகளை காட்டக்கூடும். எனினும் அவர் விரைவில் குணமடைந்து விட்டார் என்றார்.

    Next Story
    ×