என் மலர்
இந்தியா

சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறை: ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்திய வாலிபர்

- 2023-ல் சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
- 8 மாதம் சிறையில் இருந்து நிலையில் ஜாமினில் விடுதலை ஆன பின், மீண்டும் சிறுமியை கடத்தியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறைக்கு சென்ற வாலிபர், ஜாமினில் வெளியில் வந்து அதே சிறுமியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் படோஹி என்ற இடத்தை சேர்ந்தவர் ஆசிஃப் கான் என்ற சோட்டே பாபு (22), இவர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கற்பழித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளிக்க, சோட்டே பாபு கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போலீசார போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட சோட்டோ பாபு சிறையில் அடைக்கப்பட்டார். 8 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், ஜாமின் பெற்று விடுதலை ஆனார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அதே சிறுமியை (17) தற்போது கடத்திச் சென்றுள்ளார்.
அவரது தந்தை மகளை தேடி வந்த நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 137(2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.
ஏற்கனவே சிறுமியை கடத்தி சென்று கற்பழித்த வழக்கில கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பிய வாலிபர், அதே சிறுமியை மீண்டும் கடத்திச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.