search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்
    • அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    புதுச்சேரி:

    மணவெளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக ஒப்புதல் பெற்று தந்தார்.

    அதன்படி அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சிவானந்தம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் அகிலன், மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனத மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மாயகிருஷ்ணன் , ஜானகிராமன், மாறன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், ரமேஷ், உமா, கதிரேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • எதிர்கட்சித்தலைவர் சிவா கேள்வி
    • புதுவை அரசு அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் ஓதியம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் சம்பள உயர்வு மற்றும் போனஸ் வழங்கக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவை தொழிலாளர் துறை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காண வேண்டும். புதுவை அரசு அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக கவர்னர் மாளிகையில் வீசிய பெட்ரோல் குண்டு பற்றி காவல்துறை தெளிவாக கூறிவிட்டது. புதுவை கவர்னர் ஊரில் இல்லா விட்டாலும், கவர்னர் மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அப்படி என்ன மிரட்டல் உள்ளது? மக்கள் வழித்தடங்களை மூடி வைத்துள்ளனர்.

    அதை முதலில் திறந்து விடுங்கள். சுற்றியுள்ள பூங்கா நுழைவு பகுதியை ஏன் மூடி வைத்துள்ளீர்கள்? முதலில் அதை திறந்து விடுங்கள்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    • அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு
    • தி.மு.க. நபர்களின் நட்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை துளைத்து விட்டு குற்றப்பின்னணி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலா ளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி இன்று வில்லியனூர் வசந்த நகரில் நடைபெற்றது.

    மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செய லாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார்.

    மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் பிரதீப்குமார், பொதுக் குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில ஜெ. பேரவை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநிலக் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவையில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதியிலும் கிளை வாரியாக அமைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார்.

    மேலும் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இளைஞர் மற்றும் இளம் பெண்களை அ.தி.மு.க.வில் அதிக அளவில் சேர்த்து வருகிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் ஆன்மீக கோவில் நகரம் வில்லிய னூர் என மக்கள் அழைப்பார்கள்.

    இந்த தொகுதியில் பல்வேறு கட்சியின் சார்பில் தேர்ந்தெ டுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஆன்மீக வாதிகளாக இருந்து தொகுதியின் அமைதிக்கு துணையாக செயல்பட்டார்கள்.

    நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் உருளை யன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பலமுறை வெற்றிபெற்ற தி.மு.க.

    எம்.எல்.ஏ. சிவா மக்கள் விரோத செயலால் தான் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என பயந்து சிறுபான்மை வாக்கு களை குறி வைத்து இந்த தொகுதி யில் நின்று வெற்றி பெற்றார்.

    அவர் வெற்றி பெற்ற பிறகு ஏற்கனவே உருளை யன்பேட்டை தொகுதியில் என்னென்ன சட்ட விரோத செயல்கள் நடை பெற்றதோ அவை அனைத்தையும் தற்போது இந்த தொகுதியில் தங்கு தடையின்றி நடை பெற்று வருகிறது.

    கோவில் நகரமான இந்த தொகுதி முழுக்க முழுக்க குற்றவாளிகளின் கூடார மாக மாற்றப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு தி.மு.க. பிரமுகர்களுக்கு விஷ சாராயம் இங்குள்ள திமுக பிரமுகரால் கடத்தப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். போலி மதுபானம் உற்பத்தி, போலி மதுபான கடத்தல், நடமாடும் வேன்கள் மூலம் போலி மதுபானம் உற்பத்தி செய்தல் தினசரி தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்திற்கு கஞ்சா, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கேந்திரமாக இப்பகுதி மாற்றப்பட்டுள்ளது.

    தி.மு.க. நபர்களின் நட்பில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை துளைத்து விட்டு குற்றப்பின்னணி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்த தொகுதியை சுற்றிலும் தடை யில்லாமல் அரசியல் பின்புலம் உள்ள வர்களால் மணல் கடத்தல் நடத்தப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவில் இங்குள்ள காவல்துறையினரின் செயல்பாடு உள்ளது.

    இவ்வாறு பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி. திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, முன்னாள் மாநில மாணவரணி பொருளாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ரவிகண்ணன் தலைமை வகித்து பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
    • 130 மாணவர்கள் உட்பட பல்வேறு மருத்துவ படிப்புகளை முடித்த 442 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடந்தது.

    ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ்அகர்வால் வரவேற்றார்.

    கேன்சர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ரவிகண்ணன் தலைமை வகித்து பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். ஜிப்மர் தலைவர் விஷ்வமோகன் கடோச் முன்னிலை வகித்தார்.

    பட்டமளிப்பு விழாவில் எம்.பி.பி.எஸ். படித்த 186, எம்.டி. படித்த 130 மாணவர்கள் உட்பட பல்வேறு மருத்துவ படிப்புகளை முடித்த 442 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • ரெஸ்டோ பார்களிலும் தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின், கொக்கைன் உட்பட போதை பொருட்கள் விற்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில இளைய சமுதாயத்தை பற்றி அரசு சிறிதும் கவலைப்பட வில்லை. இதனால் உலகில் உள்ள அனைத்துவிதமான தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் புதுவையில் தடையின்றி புழக்கத்தில் உள்ளது.

    போதை பொருட்களுக்காகவே புதுவைக்கு பலர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் எதையும் கண்டு கொள்வதில்லை.

    புதுவை ஆம்பூர் சாலையில் உள் ரெஸ்டோபாரில் தடை செய்யப்பட்ட, இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதைப்பொருளான கஞ்சா 3 ½ கிலோ தற்போது கைப்பற்றப் பட்டுள்ளது. இங்கு வரும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்பட்டுள்ளது.

    இதேபோலவே புதுவையில் உள்ள அனைத்து ரெஸ்டோ பார்களிலும் தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின், கொக்கைன் உட்பட போதை பொருட்கள் விற்கப்படுகிறது.

    இதற்கு முதல அமைச்சர் என்ன பதில் கூறப்போகிறார்?

    இந்த போதை கலாச்சாரம் புதுவையின் எதிர்கால நலனுக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்து போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து இளைய சமுதாயத்தை காப்பாற்ற இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • விவசாயிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது.
    • கிருஷ்ணமூர்த்தி, ரகுநாத், கோதண்டபாணி, ராஜா, உமா விநாயகம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி சார்பில் திருக்கனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். விநாயகம், தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில நிர்வாகிகள் சீனுவாசன், சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.

    புதுவை மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. விவசாயிகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது. மின்சார திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

    புதுவை அரசு மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கந்தநாதன், முத்து, நாகராஜ், அமிர்தவள்ளி, தமிழ்குமரன், பாரதி, சிவசங்கரி, மாரியப்பன், கல்வராயன், அருள், தீனதயாளன், பாலச்சந்திரன், பெரியசாமி, ராமச்ச்சந்திரன், முருகன், பிரபாகர், சந்திரன், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, ரகுநாத், கோதண்டபாணி, ராஜா, உமா விநாயகம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் தமிழிசையிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
    • ஊழியர்கள் போராட்ட குழு அமைத்து தங்களுக்கு மீண்டும் பணி கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் பொதுப்பணிதுறையில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் தேர்தல் துறை நடவடிக்கையால் நீக்கப்பட்டனர்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு அமைத்து தங்களுக்கு மீண்டும் பணி கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோர் தலைமையில் போராட்டக் குழுவினர் கவர்னர் தமிழிசையை சந்தித்தனர்.

    அப்போது பொதுப்பணிதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    எம்.எல்.ஏ.க்களுடன் போராட்டக்குழு தலைவர் தெய்வீகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அரசு தடுத்து நிறுத்த மீன்பிடி தொழில் புரிவோர் கோரிக்கை
    • சட்ட விரோதமாக கொள்ளையடித்து, கிலோ ரூ.1500 முதல் 2000 ரூபாய் வரை இறால் பண்ணைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மீன்வளத்துறை, வனத்துறை, கடலோர காவல் படை அதிகாரி களிடம் புதுச்சேரி மாநில ஆற்றில் மீன்பிடி தொழில் புரிவோர் கூட்டமைப்பு அளித்துள்ள மனு வில் கூறியிருப்பதாவது;-

    அரியாங்குப்பம் பெரிய ஆற்றில் பாரம்பரிய கடல் சார்ந்த மீனவர்களும், உள்நாட்டு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் கருப்பு நிற புள்ளி இறால், வெள்ளை இறால், களி நண்டு போன்றவை உயிரினங்கள் அழிந்த நிலையில், எஞ்சியுள்ள ஒரு சில மீன் இனங்களே உயிர் வாழ்கின்றன.

    இந்நிலையில், ஆற்றில் உள்ள மீன்கள் உணவாக உட்கொள்ள கூடிய மண் புழுக்களை சிலர் சட்ட விரோதமாக கொள்ளையடித்து, கிலோ ரூ.1500 முதல் 2000 ரூபாய் வரை இறால் பண்ணைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் ஆற்றில் மீன்வளம் பாதிக்கப்படுகிறது மேலும் ஆற்றில் மீன் பிடி தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

    எனவே மண்புழு கொள்ளையை தடுக்கவும், மீன்வளத்தை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்படுள்ளது.

    இந்த மனு அளிக்கும் போது அரியாங்குப்பம் உள்ளாட்டு மீனவர் அமைப்பு, புதுச்சேரி 10 ரூபாய் இயக்கம், மீன் வளம் காப்போம் மக்கள் இயக்கம், தேசிய மீனவர் பேரவை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடி படை போலீசார் ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 3 ½ கிலோ கஞ்சாவை கண்டெடுத்தனர்.

    இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளரான முதலியார்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் எம்.டெக். பட்டதாரி ஆவார்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவருடைய நண்பர் அஸ்வின் (34) மூலம் பெங்களூருவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து புதுவை திருமால் நகரை சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரி அஸ்வினையும் போலீசார் கைது செய்தனர். விடுதி அறையில் இருந்த 3 ½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட வினோத்குமார் புதுவையை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வின் உறவினர் ஆவார். மற்றொருவரான அஸ்வின் புதுவை அரசியல் கட்சி நிர்வாகியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர்.
    • நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் தருமபுரம் மடவிளாகம் பகுதியைச்சேர்ந்த வர் முத்துசாமி (வயது60). அரிசி கடை நடத்தி வந்தார். இந்நிலை யில், முத்துசாமி சீட்டு நடத்தி வந்தார். அதில் பலர் பணம் கட்டாமல் இவரை ஏமாற்றிவிட்டதாக கூறப்படு கிறது. இதனால் மற்ற சிலருக்கு பணம் தரமுடியாமல் முத்துசாமி அவதியுற்று வந்துள்ளார். சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்து வந்த முத்துசாமி, கடந்த 20-ந் தேதி, தான் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. பலர் தனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர்.

    நானும் பலருக்கு பணம் தரமுடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். பலர் என்னை நேரிலும், போனிலும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து முத்துசாமிய்ன் அண்ணன் தட்சிணாமூர்த்தி, காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடிவருன்றனர். அதேபோல், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும், காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த ராஜவேல் (56) என்பவர், கடந்த 19-ந் தேதி காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுநாள்வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் நந்தினி காரைக்கால் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

    • சரவணன் குடிபோதையில் அவரது தந்தையை தாக்கி வந்ததால் ராமலிங்கம் மகனுக்கு பயந்து வீட்டுக்கு சரியாக வருவதில்லை.
    • மின் விசிறியில் சரவணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராம லிங்கம். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்களும் சரவணன் (35) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. ராமலிங்கமும் அவரது மகன் சரவணனும் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்ததால் ஜெயலட்சுமி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே ராமலிங்க மும் அவரது மகனும் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். மேலும் சரவணன் குடிபோதையில் அவரது தந்தையை தாக்கி வந்ததால் ராமலிங்கம் மகனுக்கு பயந்து வீட்டுக்கு சரியாக வருவதில்லை.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சரவணன் மது குடித்து விட்டு வீட்டில் அவரது தாயாரிடம் தகராறு செய்தார். அப்போது ஜெயலட்சுமி காலையில் திருமணத்துக்கு செல்ல உள்ளதால் தூங்குமாறு சரவணனை அறிவுறுத்தினார்.

    அதற்கு சரவணன் நீ எப்படி திருமணத்துக்கு செல்வாய் என பார்த்துக்கொள்கிறேன் என கூறி ஜெயலட்சுமியை படுக்கை அறைக்கு உள்ளே தள்ளி வெளிபுறமாக பூட்டி விட்டார்.

    காலையில் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாத தால் ஜெயலட்சுமி ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டினரை அழைத்தார்.

    அப்போது அவர்கள் வீட்டின் முன் பக்க கதவை திறந்து உள்ளே வந்த போது வீட்டின் வரண்டாவில் உள்ள மின் விசிறியில் சரவணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜனதா நிர்வாகிகளிடம் மாநில பொறுப்பாளர் அறிவுறுத்தல்
    • அக்கார்டு ஓட்டலில் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து புதுவை மாநில பா.ஜனதா வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அக்கார்டு ஓட்டலில் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாநில தலைவர் செல்வகணபதி எம்பி, முன்னாள் தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், சிவசங்கரன், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், அருள்முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பழைய நிர்வாகி களுடன், நியமிக்கப்படும் புதிய நிர்வாகிகள் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

    ×