search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
    • ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரே வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 20 நாடுகள் தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரே வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற 15 வீரர்களில் ஒருவர் கூட ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹைதராபாத் அணியில் உள்ள நடராஜன் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ள போதும் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், நடப்பு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட டாப் 2 வீரர்களின் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

    ஐபிஎல் தொடரில் மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் டைரஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவது முதல் முறையாகும். இதற்கு முன்னதாக முன்னதாக பேட் கம்மின்சை 20.50 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு:

    மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)

    பேட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

    அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த தேர்தலில் பல விளையாட்டு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.
    • கவுதம் கம்பீர் டெல்லியில் உள்ள தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய தொகுதிகளில் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

    இந்நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று (மே 25) டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த தேர்தலில் பல விளையாட்டு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி வாக்களித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் , கபில்தேவ் ஆகியோர் டெல்லியில் உள்ள தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள்.
    • ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந்தேதி எதிர் கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ந்தேதியும் அமெரிக்காவுடன் 12-ந்தேதியும் கனடாவுடன் 15-ந்தேதியும் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டிகள் நடக்கிறது.

    உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா-கனடா (இந்திய நேரப்படி ஜூன் 2, காலை 6 மணி) மோதுகின்றன.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறது.

    இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள். ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.

    கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரிஷப்பாண்ட், அர்ஷ்திப் சிங் உள்ளிட்ட வீரர்கள் இன்று நியூயார்க் புறப்பட்டு செல்கிறார்கள்.

    சஞ்சு சாம்சன், ஜெய்ஷ் வால், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், ரிங்கு சிங், உள்ளிட்டோர் வருகிற 27-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்கள்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    மாற்று வீரர்களாக சுப்மன்கில், ரிங்குசிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • இந்த சீசன் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
    • இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான்.

    ஐபிஎல் 2024 சீசனின் குவாலிபையர்-2 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 175 ரன்கள் விளாசியது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 139 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    இந்த சீசன் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அணி வீரர்களுக்குள் சிறந்த வைப் உள்ளதை நீங்கள் பார்க்க முடியும். இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான். அதை செய்துவிட்டோம்.

    இது மொத்தமாக அணி உரிமையாளருக்குரியது. அவர்களில் 60 அல்லது 70 பேர் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இதில் ஈடுபடுத்துகிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் ஒன்றை கடப்போம் என்று நம்புகிறேன்.

    எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அணியில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. புவனேஸ்வர் குமார், நடராஜன், உனத்கட் எனது வேலையை எளிதாக்குகின்றனர்.

    மிடில் ஓவரில் அபிஷேக் சர்மா சிறப்பாக பந்து வீசினார். வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது அவரை பயன்படுத்தினோம். அவர் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். 170 கடினமான இலக்கு. இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், வாய்ப்பு எங்களுக்குதான் என்பது தெரியும்.

    இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    • துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 42 ரன்களை சேர்த்தார்.
    • ஐதராபாத் சார்பில் ஷபாஸ் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 34 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல துக்கம் கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கேட்மோர் 10 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன சஞ்சு சாம்சனும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரியான் பராக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 42 ரனக்ளை சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். மறுபுறம் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    ஐதராபாத் சார்பில் ஷாபாஸ் அகமது மூன்று விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அந்த வகையில், மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி பெற்றது. 2024 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. 

    • ஆர்சிபி அணிக்கெதிராக 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 27 ரன்கள் விட்டுக்கொடுதது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் குஜராத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணியால் 172 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதற்கு ஆவேஷ் கானின் பந்து வீச்சும் முக்கிய காரணம். அவர் 4 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ரஜத் படிதார் (34), லோம்ரோர் (32), தினேஷ் கார்த்திக் (11) ஆகியோரை வீழ்த்தினார்.

    அதேபோல் இன்று சென்னையில் நடைபெற்று வரும் குவாலிபையர்-2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் பந்து வீச்சில் அசத்தினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    நிதிஷ் ரெட்டி (5), அப்துல் சமாத் (0), ஷபாஸ் அகமது (18) ஆகியோரை வெளியேற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை 175 ரன்னில் கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.

    முக்கியமான இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • கிளாசன் அரைசதம் அடித்து அவுட் ஆனார்.
    • ராஜஸ்தான் அணியின் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதன் காரணமாக முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 34 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில் 37 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • ஐ.பி.எல். 2024 தொடரின் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.
    • இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். அந்த வகையில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    ஜமைக்கா:

    தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 6 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிரண்டன் கிங் அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் ஹென்ட்ரிக்ஸ் தனி ஆளாகப் போராடி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    துபாய்:

    ஐ.சி.சி.யின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தூதராக இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    • வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயரை நீக்கியுள்ளார்.
    • பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருவரின் புகைப்படங்களை நடாஷா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட, அவை பலரின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த தம்பதியிடையே ஏதும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதோ என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர்சூட்டினர்.

    இந்த நிலையில், சமூக வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயர் நீக்கியது, ஐ.பி.எல். 2024 தொடரின் போட்டிகளின் போது வராமல் இருந்தது, மற்றும் இருவர் தொடர்பான புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருப்பது இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. 

    ×