என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
- இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு
- தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறியது.
2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா அணிக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அந்த சமயத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா நிதானமாக விளையாடி 39 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் அடித்தது.