search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 15-வது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
    • இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.

    டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைச் சேர்த்து.

    அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது சுப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் 15-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். 15-வது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் சொல்கிறேன்.

    ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அர்ஷ்தீப் போன்ற ஒரு வீரர் 15-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் என்றால், நிச்சயம் பந்தை சேதப்படுத்தி இருந்தால் மட்டுமே முடியும். அதனால் இதுகுறித்து நிச்சயம் நடுவர்கள் கவணிக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு இன்சமாம் உல் ஹக் கூறினார்.

    • கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
    • இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியவர்.

    கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியவர். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகளை பற்றி பேசிக்கொண்டே போகலாம்.

    ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை குவித்து தள்ளிய பெருமையும் இவரையே சாரும். தனது மனைவி அஞ்சலியை விட 6 வயது இளையவரான சச்சின் டெண்டுல்கர், 22 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். இருவருக்கு சாரா டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சமீப காலமாக குடும்பத்துடன் நேரத்தை செல்விடும் சச்சின் டெண்டுல்கர், குடுப்பத்துடன் சுற்றுலா செல்வது பொதுவெளியில் கிரிக்கெட் விளையாடுவது என சுற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளார். அங்கு உள்ள சாலையோர கடையில் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, மும்பைக்காரன் எங்கு சென்றாலும் அவனது சாலையோர உணவை விரும்புவான் என பதிவிட்டுள்ளார்.

    • மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
    • குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

    ஜூலை மாதம் 19-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை இலங்கையின் தம்புல்லாவில் நடைபெறுகிறது.

    குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யுஏஇ அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை 26-ம் தேதி நடக்கும் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகளிர் ஆசிய கோப்பைக்கான முதல் போட்டியில் இந்திய அணி ஜூலை 19-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    • 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
    • டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

    அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     

    • கடந்த சீசனில் இரண்டு போட்டிகளில் 116 ரன்கள் அடித்துள்ளார்.
    • ஒரு அரைசதம் அவரது ஸ்கோரில் அடங்கும்.

    இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேனும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சன் கடந்த சீசனில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்தார். அதில் ஒரு அரைசதம் ஆகும். இது அந்த அணி 22-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் சர்ரே அணிக்காக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடுவார் என சர்ரே அணி தெரிவித்துள்ளது.

    சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். 2024 சீசனில் 527 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 3 போட்டிகளில் 127 ரன்கள் சேர்த்தார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். முதல் தர போட்டிகளில் 29 இன்னிங்சில் 1118 ரன்கள் அடித்துள்ளார்.

    • நடப்பு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் குர்பாஸ் முதலிடத்தில் உள்ளார்.
    • அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பசுல்லா பரூக்கி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் 7 போட்டிகளில் 281 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த அணியின் பரூக்கு 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    மேலும் முன்னணி அணியான நியூசிலாந்தை லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் வீடியோ காலில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் இந்த வெற்றி வங்காளதேச மக்களின் இதயத்தை மட்டுமின்றி, ஆஸ்திரேலியா ரசிகர்களின் இதயத்தையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக முன்னேறியதை அந்த நாட்டு மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

    அத்துடன் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷித் கான் நிகழ்த்தி உள்ளார்.

    ரஷித் கான் இதுவரை 9 முறை 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்தப் பட்டியலில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 8 முறையும், உகாண்டா வீரர் ஹென்றி சென்யாண்டோ 7 முறையும் வீழ்த்தியுள்ளனர்.

    • டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
    • பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    அபூட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

    வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஷித் கான், "அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ காலில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் வாழ்த்து சொல்லியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்.

    மழையை நம்பாமல் 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பவுலிங்கில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால் சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் தயாராகவே இருந்தோம்.

    இந்த வெற்றி எங்கள் நாட்டில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கும். தற்போது அரையிறுதியில் தெளிவான மனதுடன் விளையாடுவோம் என தெரிவித்தார்.

    • டி 20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

    மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, மேற்கத்திய தீவுகள் சூப்பர் 8 சுற்றுடனும், நியூசிலாந்து பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடனும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

    உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியுள்ள நிலையில் சூப்பர் 8 சுற்றிற்கு செல்லும் முன் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் கூறியிருப்பதாவது,

    உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகளின் பெயரை கம்மின்ஸிடம் பேட்டியின் தொகுப்பாளர் கேட்டிருப்பார்.

    அதற்கு பதிலளித்த கம்மின்ஸ் "கண்டிப்பாக ஆஸ்திரேலியா இருக்கும், மற்ற 3 அணிகள் குறித்து எனக்கு கவலையில்லை (Dont Care)" எனக் கூறியிருக்கிறார்.

    டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறிய நிலையில், இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

    • முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
    • இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

    அதே நாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறும் கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2வது அரையிறுதி போட்டியில், மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைப்பட்டு ரத்தானால் புள்ளிப் பட்டியலில் முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. 

    • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    செயின்ட் லூசியா:

    செயின்ட் லூசியாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து 92 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் 31 ரன், ஷிவம் துபே 28 ரன், பாண்ட்யா 27 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 50 போட்டிகளில் 34-ல் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவை உள்ளன.

    ×