search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும்.
    • அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய நேரப்படி இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 கிரிக்கெட் போட்டியை வரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. மேலும் வங்காளதேச அணிக்கெதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 90-க்கு மேல் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகி் அல் ஹசன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும். தனி நபராக இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளா்ர. அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இவ்வாறு ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சு சாதனையை அன்ரிச் நோர்ஜே முறியடித்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அன்ரிச் நோர்ஜே ஒரு விக்கெட்டை எடுத்தபோது அவர் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா வீரரான டேல் ஸ்டெய்ன், டி20 உலக கோப்பை போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இருந்தார். தற்போது நோர்ஜே 31 விக்கெட்டுகளுடன் அவரை முந்தியுள்ளார்.

    இந்த போட்டியில், அன்ரிச் நோர்ஜே 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் அன்ரிச் நோர்ஜே 16 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டேல் ஸ்டெய்ன் 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும், ரபாடா 19 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

    4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    • விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.
    • இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

    நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.

    அந்த வீடியோவில், பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

    இந்நிலையில் அந்த பைக் காட்சியின் புகைப்படத்தில் விஜய்க்கு பதிலாக எம்.எஸ்.டோனி மற்றும் ருதுராஜ் முகத்தை எடிட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவை விஜய் ரசிகர்கள் மற்றும் டோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    • ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன்.
    • இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல.

    தனது கிரிக்கெட் அனுபவங்கள் தொடர்பான 'I Have the Streets - குட்டி ஸ்டோரி' என்ற புத்தகத்தை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார்.

    இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் இந்திய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார்.

    அந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின் சுவாரசியமான பல்வேறு விஷயங்களை பகிர்ர்த்து கொண்டார்.

    எம்.எஸ்.டோனி குறித்து பேசிய அஷ்வின், "ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன். சேலஞ்சர் டிராபி போட்டியில் போது நூலிழையில் டோனியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியாமல் போனது. இன்றும் அந்த பால் எனக்கு நினைவில் உள்ளது. அனால் அப்போட்டியில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் நான் டைவ் அடித்து டோனியின் கேட்சை பிடித்து கொண்டாடினேன்.

    டோனி ஒருமுறை உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டால் நீங்களே சோர்வடையும் வரை உங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்" என்று தெரிவித்தார்.

    கவுதம் கம்பீர் குறித்து பேசிய அஷ்வின், "அவர் போராட்ட குணம் கொண்டவர். சில பேர் சிரிக்க மாட்டாங்க அவ்வளவுதான்.. அதுக்காக என்ன பண்ண முடியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    "இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன். இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல" என்று அஷ்வின் தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கவுஸ் 29 ரன்களும் நிதிஷ் 20 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல், ராஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பும்ரா அசத்தி வருகிறார்.
    • ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்தார்.

    தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு பும்ரா காரணமாக இருக்கிறார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கவர் போட்டோவாக பும்ராவின் புகைப்படத்தை வைத்து பும்ராவுக்கு பெருமை சேர்ந்துள்ளது.

    • இங்கிலாந்து அணியில் புரூக் அரை சதம் விளாசினார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக டி காக் 56 ரன்களும் மில்லர் 43 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர்- சால்ட் களமிறங்குகினர். சால்ட் 11, பட்லர் 17, பேர்ஸ்டோவ் 16, மொயின் அலி 9 ரன்னிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இந்நிலையில் புரூக் மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். புரூக் நிதானமாக விளையாட லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார். அவர் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து புரூக் அரை சதம் விளாசினார். கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

    அந்த ஓவரை நோர்க்யா சிறப்பாக விசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 163 ரன்களை எடுத்தது.
    • டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் குவித்தார்.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினர். டி காக் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் அவுட்டானார். டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    கிளாசன் 8 ரன்னிலும், மார்கிரம் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    • ஷான் மசூத் நோ பாலில் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டார்.
    • ஆனாலும் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் யார்க்ஷைர் - லாங்க்ஷைர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த யார்க்ஷைர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் ஷான் மசூத் 61 ரன்கள் எடுத்தார்.

    இந்தப் போட்டியின் 15-வது ஓவரை ஜாக் பிளேதர்விக் வீசினார். அப்போது ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற ஷான் மசூதின் கால்கள் ஸ்டம்பில் பட பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் ஹிட் விக்கெட் என நினைத்த அவர் கிரீசை விட்டு வெளியேறினார். ஆனால் அந்த பந்தை நடுவர் நோ பால் என்றார். இதையறியாத ஷான் மசூத், த்ரோ எறிவதை கண்டு வேகமாக ஓடியும் கிரீசை எட்ட முடியாததால் ரன் அவுட் ஆனார்.

    ஒரே பந்தில் ஷான் மசூத் ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் நடுவர் ஷான் மசூதை மீண்டும் விளையாடும்படி கூறியது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    நோ பால் சிக்னலை கவனிக்கவில்லை என்பதால் ஹிட் விக்கெட் என நினைத்து வெளியேற முயற்சித்தேன் என எதிரணி கேப்டன் மற்றும் அம்பயர்களிடம் ஷான் மசூத் கூறினார். இதனால் அம்பயர் ரன் அவுட்டை சரிபார்த்தார்.

    எம்.சி.சி. விதிகளின்படி ஒரு பேட்ஸ்மேன் தவறான புரிதல் காரணமாக கிரீசில் இருந்து வெளியேறினால், நடுவர் அந்த பேட்ஸ்மேனை பேட்டிங் செய்ய அழைக்கலாம் அல்லது அந்த பந்தை டெட் பாலாக அறிவிக்கலாம். இதனாலேயே ஷான் மசூத் மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது.

    182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில், 28 பந்துகளில் 53 ரன்களை எடுத்து சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன்மூலம், சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    விராட் கோலி இதுவரை 113 இன்னிங்ஸில் 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.

    இதனை சமன் செய்யும் வகையில், சூர்யகுமார் யாதவ் 61 இன்னிங்ஸில் 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

    • முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா 32 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 47 ரன் வித்தியாசத்தில் வென்றது. அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஜடேஜா, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி என்ற அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்திருந்த சாதனையை இந்தியா தற்போது சமன்செய்துள்ளது.

    • ஷிகர் தவானின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால், அக்ஷய் குமார் தவானின் கதாபாத்திரத்தில் நடிக்க சிறந்த தேர்வாக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
    • தினேஷ் கார்த்திக் விராட் கோலியுடன் ஐ.பி.எல் போட்டியில் ஆர்சிபி அணியில் விளையாடி உள்ளார்.

    இந்தியாவின் நட்சத்தி கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.

    இவர் பாலிவுட் நடிகரான அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், விராட் கோலியின் சுயசரிதையில், விராட் கோலி காதாபாத்திரத்தை சிறப்பாக செய்வார் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.


    கோலி எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார் என்பதை ரன்பீரால் பிரதிபலிக்க முடியும் என்று நம்புவதாகவும் இது மிகவும் முக்கியமான பகுதியாக உள்ளது என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஷிகர் தவானின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால், அக்ஷய் குமார் தவானின் கதாபாத்திரத்தில் நடிக்க சிறந்த தேர்வாக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

    தினேஷ் கார்த்திக் விராட் கோலியுடன் ஐ.பி.எல் போட்டியில் ஆர்சிபி அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×