search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    யார் பந்து வீசுகிறார்கள் என்ற கவலையில்லை.. பவுன்சரால் மிரட்டுவோம் என்ற கம்மின்ஸ் கருத்துக்கு கில் பதிலடி
    X

    யார் பந்து வீசுகிறார்கள் என்ற கவலையில்லை.. பவுன்சரால் மிரட்டுவோம் என்ற கம்மின்ஸ் கருத்துக்கு கில் பதிலடி

    • நான் எப்போதும் 2 திட்டங்களை தயாராக வைத்திருப்பேன் என கம்மின்ஸ் கூறினார்.
    • இந்த தலைமுறை யார் பந்து வீசுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பந்தைப் பார்த்து விளையாடும் என கில் கூறினார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் பவுன்சரால் மிரட்டுவோம் என கம்மின்ஸ் கூறினார். யார் பந்து வீசுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பந்தை பார்த்து விளையாடுவோம் என கில் அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து கம்மின்ஸ் கூறியதாவது:-

    இந்த போட்டியிலும் பவுன்சர்களை வீசுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. 2-வது போட்டியில் அது வேலை செய்தது. அது மட்டுமல்லாது எங்களிடம் வேறு திட்டமும் உள்ளது. நான் எப்போதும் 2 திட்டங்களை (ஏ மற்றும் பி) தயாராக வைத்திருப்பேன். ஒரு திட்டம் வேலையாகவில்லையெனில் மற்றொன்றை பயன்படுதுவேன்.

    2வது போட்டியில் அந்தத் திட்டம் வேலை செய்ததால் இந்தப் போட்டியிலும் ஏதோ ஒரு நேரத்தில் அதை நாங்கள் பயன்படுத்துவோம். காபா மைதானத்தை நேற்று நான் பார்த்தேன். அது கடந்த சில வருடங்களை போல் நன்றாக உள்ளது. கடந்த சில தினங்களாக சூரிய வெளிச்சமும் அதன் மீது நன்றாக பட்டது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியை போல் அது இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என கூறினார்.

    இதனையடுத்து கில் கூறியதாவது:-

    இளஞ்சிவப்பு நிற பந்து வித்தியாசமானது. கொஞ்சம் கடினமானது. நாங்கள் சிவப்பு நிற பந்தில் அதிகமாக விளையாடுகிறோம். ஆனால் இளஞ்சிவப்பு நிற பந்தை இரவு நேரத்தில் கை நிலை காரணமாக எதிர்கொள்வது கடினமாக இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் எப்போதும் விளையாடும் போட்டிகள் மிகவும் சவாலாக இருக்கும். எனவே இங்கே நீங்கள் அசத்துவதற்கு மனதளவில் திடமாக இருப்பது அவசியம். சூழ்நிலையில் சவாலாக இருக்கும். ஆனால் 35 ஓவர்கள் கடந்த பின் 2வது புதிய பந்தை எதிர்கொண்டு பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். கடந்த போட்டியில் வென்று இருந்தால் நீங்கள் பயப்பட மாட்டீர்கள்"

    ஆனால் நாங்கள் கடந்த முறை இந்த மைதானத்தில் வென்றுள்ளோம். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும் நாங்கள் வென்றுள்ளோம். எனவே இந்த தலைமுறை யார் பந்து வீசுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் பந்தைப் பார்த்து விளையாடும் தன்னம்பிக்கையைக் கொண்டது என்று கூறினார்.

    Next Story
    ×