என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 104 ரன்னில் சுருண்டது- பும்ரா 5 விக்கெட் சாய்த்தார்
- பும்ரா 5 விக்கெட் கைப்பற்றினார்.
- ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 150 ரன்னில் சுருண்டது. நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலேக்ஸ் கேரி 21 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி விக்கெட் மூலம் பும்ரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து வந்த நாதன் லயனை ஹர்ஷித் ராணா 5 ரன்னில் வெளியேற்றினார். கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். அப்போது ஆஸ்திரேலியா 79 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை விக்கெட் எடுக்க விடாமல் தடுத்து விளையாடியது. இதனால் ஆஸ்திரேலியாவின் அல்அவுட் தாமதமாகிக் கொண்டிருந்தது.
இறுதியாக ஹர்ஷித் ராணா இந்த ஜோடியை பிரித்தது. இதனால் ஆஸ்திரேலியா 104 ரன்கள் எடுத்து ஆல்அவட் ஆனது. ஸ்டார்க்-ஹேசில்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி விக்கெட்டாக ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும் ஹர்சித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.