என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி-ஷர்ட்-இல் ரகசிய குறியீட்டுடன் சென்னை வந்த தோனி.. மாஸ் வீடியோ வெளியிட்ட சி.எஸ்.கே.!

- எம்.எஸ். தோனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சி.எஸ்.கே. அணி சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. பத்து அணிகள் மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி தற்போது விக்கெட் கீப்பர், பேட்டராக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.
2025 ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், எம்.எஸ். தோனி சென்னை வந்துள்ளார். சென்னை வந்துள்ள எம்.எஸ். தோனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சி.எஸ்.கே. அணி சார்பில் சிறப்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
வீடியோவில் விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் பின்னணியில் ஒலிக்க, கலங்கரை விலக்கத்தில் 7-ம் எண் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எம்.எஸ். தோனி வெளியே வரும் காட்சிகளும், ஓட்டலில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே எம்.எஸ். தோனி அணிந்திருந்த டி-ஷர்ட்-இல் புள்ளிகளால் எழுதப்பட்ட குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை தொடர்பான பிரச்சினை தீவிரம் அடைந்துள்ள நிலையில், எம்.எஸ். தோனி டி-ஷர்ட்-இல் மொழியற்ற குறியீடுகள் இடம்பெற்று இருந்தது பேசு பொருளாகி உள்ளது.
எம்.எஸ். தோனி ரசிகர்கள் சிலர் 2025 ஐ.பி.எல். தொடரோடு விடைபெற்றுக் கொள்வதை உணர்த்துவதற்கு தான் அவர் இந்த டி-ஷர்ட் அணிந்து வந்தாரோ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர், அந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
THA7A FOR A REASON! ?? #Thala #DenComing #WhistlePodu ?? pic.twitter.com/VewJtZxVDr
— Chennai Super Kings (@ChennaiIPL) February 26, 2025