search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ரகானே.. பரோடாவை பந்தாடி இறுதிபோட்டிக்கு முன்னேறியது மும்பை
    X

    2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ரகானே.. பரோடாவை பந்தாடி இறுதிபோட்டிக்கு முன்னேறியது மும்பை

    • முதலில் ஆடிய பரோடா அணி 158 ரன்கள் எடுத்தது.
    • மும்பை தரப்பில் ரகானே 11 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 98 ரன்கள் குவித்தார்.

    பெங்களூரு:

    17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான மும்பை அணி, குருணல் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பரோடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவாலிக் சர்மா 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ப்ரித்வி ஷா களமிறங்கினர். ப்ரித்வி ஷா 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ரகானேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அதிரடியாக விளையாடிய ரகானே அரைசதம் விளாசினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் 46 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய ரகானே 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அவர் 11 பவுண்டரி, 5 சிக்சர் என 98 ரன்கள் விளாசினார்.

    இறுதியில் மும்பை அணி 17.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் 2-வது அரைஇறுதியில் டெல்லி- மத்தியபிரதேசம் அணிகள் சந்திக்கின்றன.

    Next Story
    ×