என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
சவுதி அரேபியாவை வீழ்த்தியும் பலன் இல்லை- கோல்கள் அடிப்படையில் மெக்சிகோ வாய்ப்பை இழந்தது
- கோல்கள் அடிப்படையில் அந்த அணி 2-வது சுற்று வாய்ப்பை இழந்தது.
- சவுதி அரேபியா 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு 'சி' பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ-ஆசியாவில் உள்ள சவுதி அரேபியா அணிகள் மோதின.
2-வது சுற்று வாய்ப்பை பெற கட்டாயம் வெற்றி என்ற நிலையில் இரு அணிகளும் விளையாடின. ஆக்ரோஷத்துடன் ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆனால் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் கோல் எதுவும் விழவில்லை.
2-வது பகுதி ஆட்டம் தொடங்கியவுடன் மெக்சிகோ கோல் அடித்தது. 47-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் ஹென்றி மார்ட்டின் கோல் அடித்தார். இதன் மூலம் மெக்சிகோ 1-0 என்ற முன்னிலை பெற்றது.
அதற்கு அடுத்த 5-வது நிமிடத்தில் அந்த அணி 2-வது கோலை அடித்தது. 52-வது நிமிடத்தில் லூயிஸ் சாவேஸ் இந்த கோலை அடித்தார். இதன் மூலம் மெக்சிகோ 2-0 என்ற முன்னிலையை பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் சவுதி அரேபியா கோல் அடித்தது. 95-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலீம் அல்டாஷாரி இந்த கோலை அடித்தார்.
ஆட்டத்தின் முடிவில் மெக்சிகோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சவுதி அரேபியாவை வீழ்த்தியும் மெக்சிகோவுக்கு எந்த பலனும் இல்லாமல் போனது. கோல்கள் அடிப்படையில் அந்த அணி 2-வது சுற்று வாய்ப்பை இழந்தது.
மெக்சிகோவும், போலந்தும் 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றன. போலந்து 2 கோல் போட்டன. 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் கோல் வித்தியாசம் பூஜ்யம் ஆகும். மெக்சிகோ கோல்கள் போட்டு இருந்தது. ஆனால் 2 கோல்கள் வாங்கியது. கோல் வித்தியாசம்-1 ஆகும்.
இதன் காரணமாக கோல்கள் அடிப்படையில் மெக்சிகோ நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை தவற விட்டது. அந்த அணி 3-வது இடத்தை பிடித்து வெளியேறியது.
சவுதி அரேபியா 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்