search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
    • வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

    இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. எப்போது செந்தில் பாலாஜி விடுதலையாகி வருவார் என அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிந்து காத்துக் கிடக்கின்றனர்.

    இந்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

    மேலும், வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை சற்று நேரம் முன்பு நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, "உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள்.

    பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை" என நீதிபதி தெரிவித்திருந்தார்.

    அதற்கு, "விசாரணை அதிகாரி முன்பு இந்த நேரத்தில் எப்படி பிணை உத்தரவாதத்தை தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பி தெரிவித்தது.

    இதனால், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    Live Updates

    • 26 Sept 2024 12:58 PM GMT

      471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இன்னும் சற்று நேரத்தில் வெளியே வருகிறார். செந்தில் பாலாஜியின் வருகை உறுதியான நிலையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

    • 26 Sept 2024 12:55 PM GMT

      செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • 26 Sept 2024 12:54 PM GMT

      உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    • 26 Sept 2024 12:52 PM GMT

      பிணை உத்தரவாதத்தை ஏற்பதில் ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • 26 Sept 2024 12:35 PM GMT

      செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    Next Story
    ×