என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பணி மாற்றி அமைக்கப்படுகிறது- புதிய திட்ட வரைபடத்தை சமர்ப்பிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
- நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து உள்ளனர்.
- விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சாலை கூவத்தூர் அடுத்த முகையூர் அருகே உள்ள ஓடையூர் ஏரியை ஒட்டி செல்கிறது. இதற்காக அடையாள கற்கள் நடப்பட்டன. நெடுஞ்சாலை பணியால் ஏரிப்பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நெஞ்சாலை பணியை தொடர பசுமைத்தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் சாலை அமைப்பதற்கான மாற்று முறைகளை பரிசீலிக்க நெஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் விரிவான ஆய்வு நடத்தி ஓடையூர் ஏரிப்பகுதி பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றம் செய்து உள்ளனர். சென்னையில் இருந்து வரும்போது வலது புறத்தில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளாமல், இடதுபுறத்தில் மேலும் 3 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஏரி பகுதியை தவிர்க்க புதிய தடுப்பு சுவர் கட்டவும் முடிவு செய்து உள்ளனர். ஆனால் ஏரியின் குறுக்கே புதிய நான்கு வழிப்பாதையில் மேம்பாலம் கட்டுவது தொடர்பான வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதுதொடர்பான விரிவான அறிக்கையை கடந்த ஜூலை 14 -ந்தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.
மேலும் புதிய திட்டத்திற்கான வரைபடத்தை சமர்ப்பிக்குமாறு பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது. இந்த வழக்கு இன்று(24-ந் தேதி) (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்