search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப்பின் செயல்படுத்தப்படும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப்பின் செயல்படுத்தப்படும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.
    • நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருவாமாத்தூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து முதல்வர் செய்து வருகிறார்.

    தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல பெட்ரோல், பால் விலையை குறைத்தார்.

    பெண்களுக்கான விடியல் பணயத்திட்டத்தில் 500 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விடியல் பயணத்திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத்திட்டத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

    31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப்பின் செயல்படுத்தப்படும். விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.

    நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும்.

    அன்னியூர் சிவாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×